On PMK .. Stalin ... Periyar - ஆ.வியில் சோ
கேள்வி: கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பா.ம.க தனது சொந்த இடங்களிலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. அதற்குப் பழைய வலிமை இல்லை என்கிறார்களே ?
பதில்: பா.ம.க வை தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக நான் கருதவில்லை. "நீயும் விட்டு விடு, நானும் சேர்த்துக்க மாட்டேன்" என்று தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும் இவர்களை கை விட்டு விட்டால், அந்த தேர்தலோடு அந்தக் கட்சி ஒரு முடிவுக்கு வந்து விடும் (அப்படி ஒரு நிலை வந்தால் பா.ம.க வின் உண்மையான பலம் தெரிய வாய்ப்புள்ளது). இரண்டு அணிகளிலும் சாராமல் தனியாக நின்றால், அவர்களால் இரண்டு ஸீட் கூட ஜெயிக்க முடியாது !
*********************
கேள்வி: உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் பொறுப்பு ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறதே ?
பதில்: அப்படி நடந்தால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஸ்டாலினுக்கு தலைமைப்பதவி கொடுப்பது என்பது திமுகவைப் பொறுத்தவரை இயல்பான ஒன்று தான். திமுக தலைமைக்கே கூட ஸ்டாலினை விட்டு விட்டு, வேறு யாரையாவது கொண்டு வந்தால், கட்சி கட்டுக்கோப்பாக இருக்காது. மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவர் மகன் ஜிகே வாசனை அரசியலுக்கு அழைத்து வந்தார்கள். அன்றைக்கு அவரோடு வந்த தமாகவினர் இன்றைக்கும் காங்கிரஸில் வாசன் பக்கம் தான் இருக்கிறார்கள். ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே ! கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல், கட்சியின் அடிமட்ட நிலையில் இருந்து, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி விட்டுத் தான் தற்போதைய இடத்துக்கு வந்திருக்கிறார். அதனால், வாரிசு அரசியல் என்பது இங்கே பொருந்தாது. (கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன்) அவர் முதலமைச்சராக வந்தால், அந்தப் பொறுப்பில் எப்படிப் பரிமளிக்கப் போகிறார் என்பது வேறு விஷயம் !
*************************
கேள்வி: அண்மையில் பெரியார் சிலைக்கு சிலர் சந்தனம் பூசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதில் உங்கள் கருத்தென்ன ?
பதில்: இந்த விஷயம் பெரியாரை, அவருடைய நினைவுகளைக் கிண்டல் செய்வதற்கு சமமானது. அது காந்தி சிலைக்கு மாமிசம் படைப்பது போன்ற ஒரு செயல் என்று துக்ளக்கில் குறிப்பிட்டிருக்கிறேன். அதே சமயம், பெரியார் சிலையை அவமதித்தவர்கள் பன்றிக் குணம் படைத்தவர்கள் என்று முதல்வர் கொதித்தெழுந்திருக்கிறார். அப்படியானால், முன்பு சேலத்தில் ராமர் படத்துக்குச் செருப்பு மாலை அணிவித்து, ராமரைப் பற்றிய அருவருப்பான வர்ணனைகளை வெளிப்படுத்தி, பெரியாரும் அவரது சீடர்களும் ஊர்வலம் நடத்தினார்களே ... அது என்ன குணம் என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும் (இப்படி எடக்கு மடக்கா கேட்டா எப்படிங்க ?). இம்மாதிரி செயல்களை ஒரு முறை நியாயப்படுத்தினாலும், அதன் பிறகு அதுவே பல வக்கிரங்களுக்கு இடம் அளித்து விடுகிறது !
--- எ.அ.பாலா
நன்றி: ஆனந்த விகடன்
*** 236 ***
10 மறுமொழிகள்:
"இந்த விஷயம் பெரியாரை, அவருடைய நினைவுகளைக் கிண்டல் செய்வதற்கு சமமானது."
அப்படின்னா படையாச்சியும் நாடாரும் பெரியாரைக் கிண்டல் செய்தார்களாமா?
"அப்படி ஒரு நிலை வந்தால் பா.ம.க வின் உண்மையான பலம் தெரிய வாய்ப்புள்ளது"
ரொம்பத்தான் டிப்ளமேட்டிக்காகக் எழுதியிருக்கீங்க, பிழைச்சுப்பீங்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thanks, Dondu Sir.
//அப்படின்னா படையாச்சியும் நாடாரும் பெரியாரைக் கிண்டல் செய்தார்களாமா?
//
????
//ரொம்பத்தான் டிப்ளமேட்டிக்காகக் எழுதியிருக்கீங்க, பிழைச்சுப்பீங்க.
//
:)))))
அண்ணாத்தை,
பட்டை சாராயம் சரக்கு மாஸ்டர் தன்னோட இந்தப் பதிவுல http://tamilbar.blogspot.com/2006/09/blog-post_30.html உன்னிய நக்கல் அடிச்சி எழுதிக்கிறார்...அத நம்ப இணைய மருத்துவர் @ பாமக இணைய கொபசெ வேற " கண்டு புடுச்சுட்டேன்...கண்டு புடுச்சுட்டேன் " அப்பிடீன்னுஆர்க்கிமிடிஸ் வித்தவுட் ட்ரெஸ்ஸுல எகிரிக்குதிச்சு ஓடுன ரேஞ்ஜுக்கு சிரிப்பானெல்லாம் போட்டு சந்தோசப்பட்டு இருக்கிறார்... கண்டுக்கினியா நீ ? இல்லீன்ன போய் பார்....
இதுல இன்னான்னா திக...திமுக...பாமக அல்லார் சொல்ரதையும்தான் எடுத்து போட்டு நிறைய பிட்டு ஓட்டிக்கினு இருக்காங்க..இத்ல பிட்டு ஒட்டி ஒட்டியே முழு சினிமா ஓட்டுர கோஸ்டியெல்லாம் இருக்கு....அல்லா கருமாந்தரத்தையும்...நீ போட்டுருக்கியே சோ கருமம் அதையும் சேத்துதான் சொல்ரேன்...என்ன மாதிரி பரதேசிங்க படிச்சிகினுதாங்கீறோம்...அதுல உன்னிய மட்டும்..பிட்டு போடுர பார்ட்டி அப்பிடீன்னுச்சே இந்த சாராய சரக்கு மாஸ்டரு...மீதி பார்டீங்க கையில ஜாஸ்தியா டிப்ஸ் வாங்கிருச்சோ என்னமோ...இதெல்லாம் நீ போய் கேக்கத்தாவல...போ கண்ணு
அனானி தம்பி,
நன்றி ! குறிப்பிட்ட பதிவை வாசித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேனே. Bartender செய்ற நக்கல் எல்லாம் OK தான். நீங்க சொல்றபடி, பிட் போடறது பொதுவா எல்லாரும் செய்யறது தானே ! ஆனால், தி.க தொடர்புடைய தளங்களிலிருந்தும் சில பதிவர்கள் சில "கருமங்களை" எடுத்துப் போடற விஷயம் அன்னார் கவனத்துக்கு வரல போலத் தெரியுது ;-)
மேலும், "நம்மவா எல்லாரும் நல்லவா" அப்படின்னு அவர் பின்புல ஆராய்ச்சி செய்றபோதே அவரோட உள்நோக்கம் தெளிவாக வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது ! அங்கதம் மட்டுமே அவரது நோக்கமா என்பது சந்தேகத்திற்கு உரியதாகி விடுகிறது !
அடுத்து, சோ தன் பதிலகளில், ஸ்டாலினையும், பெரியாரையும் பத்தி நல்லவிதமாகவே சொல்லியிருக்காரு. ஆனால், பா.ம.க வை பத்தி தான், ரெண்டு பெரிய கட்சிகளும் கைவிட்டா, அது காணாமப் போய்டும்னு ஒரு கருத்து சொல்லியிருக்காரு. அது தான், "ஊத்திக் கொடுக்கறவரை" 'சோ துப்பின கருமம்' ன்னு கடுப்பில சொல்ல வச்சிருச்சோ :)))
குழலி எங்கே ?
//குழலி எங்கே ? //
Thanks, Anony ;-)
நல்ல பதிவு.
//"நீயும் விட்டு விடு, நானும் சேர்த்துக்க மாட்டேன்//
பா.ம.கவின் சாதி வோட்டுகள் தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டனில் இல்லையென்றால் சிதறிவிடுமா? தெரியவில்லை.
அண்ணாத்தை,
அந்த திவ்யா பொண்ணு மேல கீழ கை வச்சுட்டியா..." ஓம் மூன்சில என் கை " அப்படீன்னு சா(ராய)க்கடை செம கடுப்பாகி தனிப்பதிவே போட்டு கும்மியடிச்சிக்கிட்டு இருக்கு
ஏற்கனவே சராயக்கடை குடிச்சுட்டு பதிவு ஃபுல்லா வாந்தியெடுக்கும் ( இது நான் சொல்லலை...அதுவே பெருமையா சொல்லிக்கிறதுதான்) இப்ப கோவத்துல பதிவு போட்டுருக்கா...பிச்சக்காரன் வாந்தியெடுத்த மாதிரி இருக்கு :)))
That is alright, Anony !
Post a Comment